தலையங்கம்

August 2020
தலையங்கம்

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைஏற்றம் தரும் 20-20 யா? ஏமாற்றம் தரும் 420 யா?


திராவிடம், திராவிடர், திராவிடக் கொள்கை: 1947 தொகுதி 7 பதிப்பு 15 திராவிடன் என்ற சொல்லுக்கு பிரிட்டானியா கலைக்களஞ்சியம் தரும் விளக்கம் என தமிழர் பேரியக்கத் தலைவர் பெ மணியரசன் அவர்கள் சங்கமம் 4 நிகழ்வில் உரையாற்றியது.Dravidian only a name  applied in Indian few States to the souhtern group of the Brahmins. But Dravidian is applied unfortunately to the indigenius people of India soth of the India கெடுவாய்ப்பாக, துரதிஷ்டவசமாக இன்று விந்திய மலைக்குத் தெற்கே உள்ள உள்ளூர் மண்ணின் மக்களுக்கு இந்த திராவிடன் என்ற பெயர் வந்துள்ளது என்கிறது பிரிட்டானிகா கலைக்களஞ்சியம். 

உண்மையில் திராவிடம் என்ற சொல் பிராமணர்களைத்தான் குறிக்கிறது.தென்னிந்தியாவில் வசித்த பிராமணர்களை பஞ்ச திராவிடர்கள் என்று கூறியுள்ளார்கள். அதாவது தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய பகுதிகளில் வசித்த பிராமணர்கள்தான் பஞ்ச திராவிடர்கள் என்பவர்கள். ஆனால் இன்றைய நிலையில் திராவிடம் என்ற பெயரில் தமிழகத்தை சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். டாக்டர் சுப்பிரமணியசுவாமி அவர்கள் கூறியதுபோல் பிராமணர்கள் வேண்டாம். ஆனால் தங்களுக்கு வெற்றி வாகை சூட பிஹார் பிராமணன் வேண்டும். இந்தி மொழி வேண்டாம். ஆனால் தாங்கள் நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் ஹிந்தியை கற்றுக்கொடுத்து பெரும் பொருளீட்ட வேண்டும். சமஸ்கிருதம் வேண்டாம். ஆனால் கட்சியின் சின்னத்தை சமஸ்கிருதத்தில் பெயரிடுவோம். மும்மொழித் திட்டம் வேண்டாம். ஆனால் மும்மொழித் திட்டம் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் எம்பிக்களுக்கு 10 இடங்கள் வருடம்தோறும் வேண்டும். இப்படி எல்லாவற்றிலும் திராவிடம் என்பது உண்மைக்குப் புறம்பான தகவல்களின் திரிபு என்ற நிலையை மக்கள் இன்று உணர்ந்து உள்ளார்கள். இனியும் திராவிடம் என்ற பெயரில் ஹிந்தி, சமஸ்கிருதம் உட்பட பிறமொழிகளை கற்றுக்கொள்வதற்கு இந்த திராவிடக்கட்சிகள் தடையாகஇருந்தால் பொதுமக்கள் அவர்களை தேர்தலில் காணாமல் போகச் செய்துவிடுவார்கள். காரணம், காலத்தின் கோலத்திற்கு ஏற்ப மாறமறுப்பவனை இந்தசமூகம் வரவேற்பது இல்லை. இன்றைய கணினியுகத்தில் யார் எதைச்செய்தாலும் அது உடனடியாக பொதுமக்களின் பார்வைக்கு வந்துவிடுகிறது. கொள்கை என்ற பெயரில் மொழிகளை மறுப்பதும் அதே மொழிகளைத் தாங்கள் நடத்தும் பள்ளிகளில் புகுத்தி கொள்ளை அடிப்பதையும் மக்கள் இன்று வெறுக்கிறார்கள். இந்த புதிய கல்விக் கொள்கை இதைத்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று எதையும் திணிக்கவில்லை. மாறாக எதைவேண்டுமானாலும் எப்போதுவேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். அதற்கு அரசு தடையாக இருக்காது என்ற உயர் விளக்கத்தைத் தந்துள்ளது. இதை பெரும்பாலோனோர் வரவேற்றுள்ளார்கள். இறுதியாக புதிய கல்வி கொள்கை ஏழை மக்களுக்கு ஏற்றம் தரும் 20-20 ஆக உள்ளது. கல்விக் கொள்ளையர்களுக்கு ஏமாற்றம் தரும் 420 ஆக உள்ளது. என்பதே இன்றைய எதார்த்தம். மத்திய அரசு பணம் இருப்பவனுக்கு ஒரு கல்வி, பணம் இல்லாதவனுக்கு ஏன் கல்வி? என்ற நிலையை மாற்ற முயற்சிப்பதாக இந்த புதிய கல்விக் கொள்கையில் தோன்றுகிறது. வரவேற்போம். மாற்றத்தை ஏற்படுத்துவோம். இவற்றில் முரண்பாடுகள் வந்தால் மத்தியரசை எதிர்ப்போம். ஜெய்ஹிந்த்.

34. ஆண்டுகளுக்குப் பிறகு வரும் புதிய தேசிய கல்விக் கொள்கையில்  கல்வி டுடே இதழின் பங்கு.: கல்வி டுடே இருமொழி மாத இதழை கடந்த 2007 மே மாதம் இயக்குனர் சிகரம் கே பாலசந்தர் அவர்கள் முதல் இதழை வெளியிட சென்னை டிடி பொதிகை முன்னாள் இயக்குனர் டாக்டர் பாலரமணி அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். கடந்த  14 ஆண்டுகளாக வெளிவரும் நம் இதழில் மத்திய அரசு கொண்டுவந்த தேசிய கல்வி கொள்கை (திரு. டி எஸ் ஆர் சுப்பிரமணியன்) வரைவு 2016 குறித்து நம் வாசகர்கள், கல்வியாளர்கள், துணைவேந்தர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என 50 ஆளுமைகளிடம் கருத்துக்கள், ஆலோசனைகளைப் பெற்று கல்வி டுடே ஆகஸ்ட், செப்டம்பர் 2016 இரு இதழ்களை தேசிய கல்வி கொள்கை (வரைவு) 2016 சிறப்பிதழாக வெளியிட்டிருந்தோம். நம் இதழ் வாயிலாக மத்திய அரசுக்கு கல்வி ஆலோசனைகளை வழங்கிய 50 ஆளுமைகளுக்கு கல்வி டுடே 2018 முப்பெரும் விழாவில் முன்னாள் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர்  அன்புமணிராமதாஸ் அவர்கள் சமூக, கல்விச் சிந்தனையாளர் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்கள். தேசிய கல்வி கொள்கை (டாக்டர் கஸ்தூரிரங்கன்) வரைவு 2019 குறித்து மீண்டும்  கருத்துக்கள் ஆலோசனைகளை 32 புதிய ஆளுமைகளிடம் பெற்று கல்வி டுடே ஜூன், ஜூலை, ஆகஸ்ட் 2019 என மூன்று இதழ்களை தேசிய கல்விக் கொள்கை (வரைவு) 2019 சிறப்பிதழாக வெளியிட்டிருந்தோம். இந்த ஐந்து சிறப்பு இதழ்களிலும் நாம் வழங்கிய பெரும்பாலான ஆலோசனைகளை (குறிப்பாக ஜிடிபியில் கல்விக்கு அதிக ஒதுக்கீடு, மொழிக்கல்வி, தொழிற்கல்வி, தரமான, எளிதான பாடத்திட்டம், ஆசிரியர் பயிற்சி, திறன் மேம்பாடு) ஏற்றுக்கொண்ட மத்திய அரசுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றி. கல்வி டுடே ஆகஸ்ட் 2020 ஐ தேசிய கல்வி கொள்கை 2020 சிறப்பிதழாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இதற்குக் காரணமான அனைவருக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றி.

குறிப்பு: பணம் இருப்பவனுக்கு ஒரு கல்வி பணம் இல்லாதவனுக்கு ஏன் கல்வி? என்ற நிலையை மாற்ற முயற்சிக்கும் மத்திய அரசின் இந்த புதிய தேசிய கல்வி கொள்கை வாயிலாக புதிய பாரதத்தை வென்றெடுப்போம். ஜெய்ஹிந்த்!.         - ஆசிரியர்

புதிய கல்விக் கொள்கை மக்களுக்கு ஏற்ற தரும் 20-20: 1. 10 + 2 போர்டு அமைப்பு கைவிடப்பட்டது.

2. புதிய பள்ளி அமைப்பு 5 + 3 + 3 + 4 ஆக இருக்கும்.

3. 5 முன்பள்ளி வரை, 6 முதல் 8 நடுநிலைப்பள்ளி, 8 முதல் 11 உயர்நிலைப்பள்ளி, 12 முதல் பட்டப்படிப்பு.

4. எந்த பட்டமும் 4 ஆண்டுகள் ஆகும்

5. 6 ஆம் வகுப்பு முதல் தொழிற்கல்வி படிப்புகள் உள்ளன.

6. 8 முதல் 11 வரை மாணவர்கள் பாடங்களைத் தேர்வு செய்யலாம்.

7. அனைத்து பட்டப்படிப்பு படிப்பிலும் பெரிய மற்றும் சிறியதாக இருக்கும். எடுத்துக்காட்டு - அறிவியல் மாணவர் இயற்பியலை மேஜராகவும், இசை சிறியதாகவும் இருக்கலாம். எந்த கலவையும் அவர் தேர்வு செய்யலாம்.

8. அனைத்து உயர் கல்வியும் ஒரே அதிகாரத்தால் மட்டுமே நிர்வகிக்கப்படும்.

9. யுஜிசி ஏஐசிடிஇ இணைக்கப்படும்.

10. அனைத்து பல்கலைக்கழக அரசு, தனியார், திறந்த, கருதப்பட்ட, தொழில் போன்றவற்றுக்கு ஒரே தரம் மற்றும் பிற விதிகள் இருக்கும்.

11. நாட்டில் உள்ள அனைத்து வகையான ஆசிரியர்களுக்கும் புதிய ஆசிரியர் பயிற்சி வாரியம் அமைக்கப்படும், எந்த மாநிலமும் மாறமுடியாது.

12. எந்தவொரு படத்தொகுப்பிற்கும் அதே அளவிலான அங்கீகாரம், அதன் மதிப்பீட்டு படத்தொகுப்பின் அடிப்படையில் தன்னாட்சி உரிமைகள் மற்றும் நிதிகள் கிடைக்கும்.

13. பெற்றோர்கள் 3 வருடங்கள் வரை வீட்டிலும், முன்பள்ளி 3 முதல் 6 வரையிலும் குழந்தைகளுக்கு கற்பிக்க புதிய அடிப்படை கற்றல் திட்டம் அரசாங்கத்தால் உருவாக்கப்படும்.

14. எந்தவொரு பாடத்திட்டத்திலிருந்தும் பல நுழைவு மற்றும் வெளியேறுதல்.

15. ஒவ்வொரு ஆண்டும் பட்டப்படிப்புக்கான கடன் அமைப்பு சில வரவுகளைப் பெறும், அவர் நிச்சயமாக இடைவெளி எடுத்து மீண்டும் படிப்பை முடிக்க வந்தால் அவர் பயன்படுத்திக் கொள்ளலாம்.

16. அனைத்து பள்ளி தேர்வுகளும் ஒரு வருடத்திற்கு செமஸ்டர் வாரியாக இருக்கும்.

17. பாடத்திட்டம் எந்தவொரு பாடத்தின் முக்கிய அறிவாக மட்டுமே குறைக்கப்படும்.

18. மாணவர்களின் நடைமுறை மற்றும் பயன்பாட்டு அறிவில் அதிக கவனம் செலுத்துதல்.

19. எந்தவொரு பட்டப்படிப்பு படிப்புக்கும் மாணவர் ஒரு வருடம் மட்டுமே பூர்த்திசெய்தால் அவருக்கு அடிப்படை சான்றிதழ் கிடைக்கும், அவர் இரண்டு ஆண்டுகள் பூர்த்தி செய்தால் அவருக்கு டிப்ளோமா சான்றிதழ் கிடைக்கும், அவர் முழு படிப்பை முடித்தால் பட்டம் சான்றிதழ் கிடைக்கும். எனவே எந்தவொரு மாணவரின் வருடமும் இடையில் போக்கை முறித்துக் கொண்டால் அவருக்கு கல்வி இழப்பு ஏற்படாது.

20. அனைத்து பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு பாடநெறி ஊட்டமும் ஒவ்வொரு பாடத்திட்டத்தையும் புரியவைத்து ஒற்றை அதிகாரத்தால் நிர்வகிக்கப்படும். புதிய கல்விக் கொள்கை கல்வி வியாபாரிகளுக்கு ஏமாற்றம்தரும் 420.

1. நாங்கள்தான் தாய்மொழியான தமிழ் மொழியின் குண்டர்கள் என இனிஏமாற்ற முடியாது.
2. அரசு பள்ளிகளின் தரம் சிபிஎஸ்இ தரத்திற்கு உயரும்போது தனியார் பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறையும்.
3. ஹிந்தி, ஜெர்மனி, பிரஞ்ச், ஸ்பானிஷ் போன்ற அயல் மொழிகளை நாங்கள் மட்டுமே கற்றுத் தருகிறோம் என்று கூறி இனி ஏமாற்ற முடியாது.
4. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தரப்படுத்தப்படுவதால் சிறந்த கல்வியை எங்கள் ஆசிரியர்களால்தான் தரமுடியும் என மார் தட்ட முடியாது.
5. தொழிற் கல்வியின் முக்கியத்துவம் பள்ளிகளில் புகுத்தப்படுவதால் தனியார் பள்ளிகள் இனி kill based education என்று பிரித்துப்பேசி பணம் பார்க்கமுடியாது.
6.அரசு பள்ளிகளில் டிஜிட்டல் மயம் ஆகிவிட்டால் கல்வி வியாபாரிகள் டிஜிட்டல் கிளாஸ் ரூம் எனக் கூடுதல் வசூல் செய்ய இயலாது.
7. 3 வயது முதல் மழலையர் பள்ளிகளை அரசு கொண்டு வருவதால் தனியார் பள்ளிகள் நடத்தும் கேஜி வகுப்புகள் கூடுதல் விலைக்குப் போகாது.
8. இசைக்கல்வி அரசுபாடத்திட்டத்துடன் வருவதால் அதனை காட்டி லாபம் பார்க்க இயலாது.
9. இணைய வழிப் பாடங்கள் மாநிலமொழியில் வெளியிடுவதால் தனியார் பள்ளிகள் இணையவழி என்ற பெயரில் இனி பெருந்தொகை வசூலிக்க இயலாது.

10. NEET, IIT, IIM போன்றவற்றில் சேர்வதற்கு சிறப்பு திறன் பயிற்சி என்று கூறி பெற்றோரிடம் பெரும்தொகை வசூலிக்க இயலாது.

சுருக்கமாகச் சொன்னால் கோலாகல சீனிவாசன் அவர்கள் கூறியதுபோல் கொள்கை அளவில் பிற மொழிகளை எதிர்க்கும் அரசியல் தலைவர்கள் அவர்கள் நடத்துகின்ற அல்லது அவர்களது உறவினர்கள் நடத்துகின்ற தனியார் பள்ளிகளில் மொழியின் பெயராலும் சிறப்பு வகுப்புகள் பெயராலும் நடத்தப்படுகின்ற கல்விக் கொள்ளைகள் தடுக்கப்படும். ஆகவே அவர்களின் வருவாய் பாதிப்பதால் அவர்களிடம் எதிர்ப்பைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது என்ற அவரது கூற்று முற்றிலும் உண்மையானது. இதையே நாமும் வழிமொழிகிறோம்.

****************************************************

July 2020
தலையங்கம்-1

சாத்தான்குளம் சாத்தான்களின் குளம் ஆனது யாராலே? எதனாலே?

நினைவில் வாழும் ஜெயராஜ், பினிக்ஸ் ஆகியோரது மரணத்திற்குக் காரணமானவர்களுக்கு அதீத கண்டனத்தையும் ஜெயராஜ், பெனிக்ஸ் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.             -ஆசிரியர்.

கொரானா கொடுமை: கண்ணுக்குத் தெரியும் எதிரியை சமாளித்துவிடலாம், ஆனால் கண்ணுக்குத் தெரியாத எதிரியை சமாளிப்பது கடினம் என்றனர் நம் முன்னோர். அது இன்று முற்றிலும் உண்மையாகியுள்ளது. கண்ணுக்குத்தெரியும் எதிரியாக காவலர்களையும் கண்ணுக்குத் தெரியாத எதிரியாக கொரோனாவையும் மக்கள் சாத்தான்குளம் இரட்டைக் கொலைச் சம்பவத்திற்குப் பிறகு பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். இது அரசுக்கும் காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் உகந்தது அல்ல.

இந்த கொரோனா காலத்தில் வெளியில் வருகின்ற பொதுமக்களிடம் வியாபாரம் செய்து பிழைப்பை ஓட்டலாம் என்ற எண்ணத்தில் உயிரையும் பொருட்படுத்தாது வணிகம் செய்ய வந்து, வாழ்வை இழந்துள்ளார்கள் இந்த வணிகர்கள். கூடுதல்நேரம் கடையைத் திறந்துவைத்தார் என்ற முதல்நாள் குற்றச்சாட்டிற்கு மறுநாள் காவலர்களால் அழைத்துச் செல்லப்பட்டு செயற்கையாக மரணம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் வெள்ளைநிற காவலரின் ஆணவத்தால் கருப்பின குடிமகன் காலால் மிதிபட்டு மரணித்தார். மக்கள் எழுச்சியால் அந்நாட்டுக் காவலர்கள் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டனர் மக்களிடம். காரணமான காவலர்கள் தற்போது கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

ஆனால் நம்நாட்டில் இரட்டைக் கொலைச் சம்பவத்தை மதுரை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த மரணங்களை வழக்காக எடுத்துக் கொண்டது வரவேற்கத்தக்கதுதான் என்றாலும் நம் பொதுமக்கள் அமெரிக்காவைப் போன்று விரைவான நீதியை தொடர்புடைய துறையிடமிருந்து எதிர்பார்க்கிறார்கள். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இந்தக் கொரோனா காலத்தில் உயிர் பிழைப்பது என்பது அரிதினும் அரிது என்று மக்கள் மனதில் எண்ண வைத்துள்ளது இந்த நிகழ்வு.

யாராலே எதனாலே: அரசியல்வாதிகள் காவல்துறையை ஏவல் துறையாக மாற்றியது, காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு தனக்கு ஏற்ற வகையில் நடத்துவது, ஓய்வில்லாத அதிகபணி, அதிகப்படியான அதிகாரம், தான் எதுசெய்தாலும், அதிகளவு அரசியல்வாதிகளுக்கு உதவுவதால் உச்சபட்சமாக பணியிட மாற்றம் மட்டுமே செய்யப்படுவோம் என்ற தவறான எண்ணமும்தான் இதுபோன்ற கொடூர லாக்கப் மரணங்களுக்குக் காரணமாகும். காவலர்களுக்கு தடி கொடுத்திருப்பது தீயசக்திகளிடம் இருந்து மக்களைக் காப்பதற்குத்தானே தவிர, காவலர்களே தீயசக்தியாக மாறுவதற்கு அல்ல. இந்த தீயக் கயவர்களால் தூய சக்திஉடைய காவலர்களும் அவப்பெயரை சுமக்கிறார்கள். பழி ஓரிடம், பாவம் ஓரிடமா? என்ற கேள்விக்கு காவலர்கள்தான் தீர்வு காண வேண்டும்.

July 2020
தலையங்கம்-2

இறைமறுப்பு என்பது இந்து மதத்திற்கு மட்டுமா? இல்லை பிற மதத்திற்குமா?


இறைநம்பிக்கையுள்ள பிற மதத்தினரிடம் ஒரு கேள்வி!

திருமுருக கிருபானந்த வாரியார் இரை தேடுவதுடன் இறையையும் தேடு என்பார். இறைநம்பிக்கை எல்லா  மதத்தினரிடமும் இருக்கக்கூடிய ஒன்று. ஆனால் இறைமறுப்பாளர்களின் இறைமறுப்பு என்பது இந்துக் கடவுள்களை மட்டுமே மறுப்பது என்றால், பிற மதக் கடவுள்களையும் அவர்தம் இறை நம்பிக்கையையும் ஏற்கிறார்கள் என்றுதானே பொருள். இறைமறுப்பாளரின் சிலையை இந்து மத வழிபாட்டுத் தலங்களில் மட்டுமே வைப்பது என்பது இந்துமத வழிபாட்டாளர்களின் உணர்வைப் புண்படுத்தாதா? இதை ஏன் சகோதரத்துவம் பேசுகின்ற, இந்தியா சமயசார்பற்ற நாடு என்று பேசுகின்ற, 
பிறமத இறைஏற்பார்கள் கேள்வி எழுப்புவது இல்லை?
குறிப்பாக இஸ்லாமியர்களுக்குத் தனிநாடு என்று இந்தியாவைப் பிரித்து பாகிஸ்தான் என்ற நாடு உருவானபோது நாங்கள் இந்தியாவில்தான் இருப்போம். இந்தியாதான் எங்கள்நாடு. இந்துக்கள் எங்கள் சகோதரர்கள் என்று கூறி பாகிஸ்தான் செல்லாமல் இந்தியாவில் வாழுகின்ற ஒரு நாளில் ஐந்து வேளை தொழுகை செய்து இறைநம்பிக்கையோடு அதிகளவு பற்று கொண்ட இஸ்லாமியப் பெரியோர்கள், சகோதரர்கள் கண்டனம் தெரிவித்து ஏன் எதிர்க்கவில்லை?. விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையை முற்றிலும் ஆராதனை நாளாக வழிபடும் கிறிஸ்தவப் பெரியோர்கள், சகோதரர்கள் ஏன் எதிர்க்கவில்லை?. 

கேரளாவில் மின்துறை அமைச்சராக இருந்த இஸ்லாமிய சகோதரர், தந்தி டிவி நேர்காணலின்போது, இந்தியா சுதந்திரம் பெற்ற போது இருந்த மசூதிகள், தேவாலயங்களின் எண்ணிக்கை எவ்வளவு? இன்று மசூதிகளின், தேவாலயங்களின் எண்ணிக்கை எவ்வளவு? இவ்வளவு எண்ணிக்கை பெருகுவதற்குக் காரணம் இந்துக்களிடம் உள்ள சகிப்புத் தன்மைதான் காரணம் என்றார். இது முற்றிலும் உண்மை. இதே உணர்வு அவர்களுக்கும் இருக்க வேண்டாமா? இந்துமத இறைநம்பிக்கை உள்ள கோவில்களுக்கு அருகே இறைமறுப்பாளரின் சிலை ருக்கலாமா?. வைக்கலாமா? என்ற கேள்வியை ஏன் அவர்கள் வலுவாக எழுப்பவில்லை? இதயா அவர்களின் மதமும் மதகுருமார்களும் கற்றுக் கொடுத்து இருப்பார்கள்?. சத்தியமாக இருக்கவே இருக்காது. சகோதரர் வேலூர் இப்ராஹிம் கூறுவதுபோல், கடவுளை காட்டுமிராண்டி என்று கூறுபவன், கூறுபவர்கள் காட்டுமிராண்டிக் கூட்டமாகத்தான் இருக்கமுடியுமே தவிர, ஒரு நல்ல இறை ஏற்பாளனாக இருக்க இயலாது. இறைவன் மீது நம்பிக்கை கொண்ட எந்தமதத்தவரும் இந்தக் காட்டுமிராண்டிக் கூட்டத்தை ஆதரிக்கக்கூடாது என்பார். இனிவரும் காலங்களில் இறை நம்பிக்கையுள்ள பிறமத பெரியோர்கள், சகோதரர்கள் இறை நம்பிக்கையற்றவர்களின் சிலையை இந்துக்களின் இறைவழிபாட்டுத் தலத்திலிருந்து அகற்றுவதற்கும் இனி புதியதாக நிறுவாமலும் இருக்க, துணை புரிந்து அவர்களின் சகோதர பாசத்தை மெய்ப்பிப்பார்கள் என்று நம்புகிறோம். அப்போதுதான் நீங்களும் எங்களைப் போன்று சகோதர உணர்வோடு இருக்கிறீர்கள் என்று பொருள்.

இந்து மத நம்பிக்கையுள்ள இந்துக்களிடம் ஒரு கேள்வி!

உலகின் மொத்த மொழிகளுக்கு எல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழி ஆன்மிகத்தால்தான் அதிகம் வளர்ந்தது. தற்போதும் வளர்க்கப்பட்டு வருகிறது. தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைகள், கம்பராமாயணம், வில்லிபாரதம் என ஆன்மீகம் வளர்த்த நூல்களின் பட்டியல் நீளும். இந்த ஆன்மீக நூல்களில் உள்ள பக்திரசத்தை உணராத, இறைநம்பிக்கையற்ற தனக்கு சுகம் தேவை என்றால் தாயிடமும் சகோதரியிடமும் அனுபவித்துக் கொள்ளலாம் என்றும் வளர்த்த மகளையே தாரமாக்கிக் கொள்ளலாம் என்றும் காட்டுமிராண்டிக் கொள்கை உடையோருக்கு காமரசம் மட்டுமே தெரியும். இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! என்ற சிவபுராணத்தை வரிகளை நெஞ்சில் சுமக்கும் ஜி.யு.போப்-ஐ பாருங்கள், ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க, தென்னாடுடைய சிவனே போற்றி, என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற திருவாசக வரிகளைப் போற்றி சவுதிஅரேபியாவில் சிவாலயம் கட்டுவதற்கு உதவிய சவுதிஅரேபிய இஸ்லாமிய இறை தூதர்களைப் பாருங்கள். யாழ்ப்பாணம் நாவற்குழியில் உள்ள திருவாசக அரண்மனையைப் பாருங்கள். உலகிற்கே ஆன்மீகம் போதித்த மொழி தமிழ் மொழி என்பதும் ஆன்மீக குரு இந்தியநாடுதான் என்பதும் புரியும்

உலகின் உயர்ந்த நெறி இந்துதர்மநெறி. காரணம் இந்துமதத்தில் மட்டும்தான் இறைமறுப்பு, இறைஏற்பு என்று சொல்லுகின்றவர்களையும் எந்த தெய்வத்தை வேண்டுமானாலும் தொழலாம், தொழாமலும் இருக்கலாம் என்ற சுதந்திரம் உள்ளது. கந்த சஷ்டிக் கவசத்தை ஆபாசமாக விமர்சிக்கும் காட்டுமிராண்டிக் கூட்டத்தை அதற்கு துணைபோகின்ற, அதனை நியாயப்படுத்துகின்ற, இந்து மத நம்பிக்கையற்ற, இந்துக்கடவுள்களை மட்டுமே விமர்சிக்கின்ற அரசியல்வாதிகளை, இயக்கங்களை மனதில் நிறுத்தி எதிர்வினை ஆற்றுங்கள். இவர்களை சோட்டால் அடிக்க வேண்டாம். ஆனால் உங்களின் ஓட்டுக்களால் அடிக்கலாம். ஓட்டுக்காக மட்டுமே நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு அலையும் ஓநாய் கூட்டங்கள் இவர்கள். ஆகவே நம்மை ஏற்காத இந்துமத விரோதிகளை, நம் பண்டிகைகளை விடுமுறைக்கால சிறப்புநிகழ்ச்சி என்று கூறுகின்ற பத்திரிக்கை, தொலைக்காட்சிகளை புறக்கணியுங்கள். பணம், பதவி, ஓட்டு என்றால் மட்டுமே அவர்கள் திருந்துவார்கள். பயப்படுவார்கள். அதுவும் தேர்தல் காலத்தில் மட்டுமே. உங்களின் ஆதரவு ஓட்டுக்கள் மூலம் இந்துக்களை ஒன்றிணைத்து இந்து மதத்திற்கான மரியாதையை பெறுங்கள். தான் பிறந்த மதத்தின் மீது நம்பிக்கை இல்லாமல், அவர்களது இயற்பெயரை மறைத்து, இந்துமதப் பெயர்களை வைத்துக்கொண்டு, இந்து மதக் கோட்பாடுகளை கேலிசெய்து திரைப்படம் எடுக்கும் இயக்குனர், நடிகர்கள், கவிஞர்களின் திரைப்படங்களைப் புறக்கணித்து, அவர்களின் முகத்திரையை கிழியுங்கள். அப்போதுதான் உங்களின் தேவை அவர்களுக்குப் புரியும். இறுதியாக மதிக்கின்ற காலுக்கு மலராய் இருங்கள். உங்களை மிதிக்கின்ற காலுக்கு முள்ளாய் இருங்கள்.  ஜெய்ஹிந்த்!

****************************************************

June 2020
ஆன்மிகத்தால் அகிலம் உயருமா? நாத்திகத்தால் நாடு தாழுமா?

ஆன்மீகம்: ஆன்மீகத்துடன் தேச நலனை விரும்புகின்ற பொறுப்புணர்ச்சி நம் மாணவர்கள் இடத்திலே வரவில்லை. அதனால்தான் நாடு இந்த கீழான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதில் விரைவில் மாற்றம் வரும். இதுநாள்வரை ஏமார்ந்த நாம் இனி ஏமாற மாட்டோம். ஏனென்றால், இன்றைய இளைஞர்கள் உலகத்தை தன் உள்ளங்கையில் வைத்துள்ளார்கள். தமிழ் வழியில் கல்வி கற்றிருந்தால் தமிழ் ஆசிரியர்கள் மூலம் பல நல்ல விழுமியங்களை கற்றிருக்கமுடியும். மொழிப்பற்றும் நாட்டுப் பற்றும் இதன் வாயிலாக மிகுந்திருக்கும். ஆகவே தாய்மொழிக் கல்வியான தமிழ் மொழியை முதலில் புகட்ட வேண்டும். பிற மொழி கற்பதில் தவறில்லை. தாய்மொழி முதன்மை யாகவும் பிற மொழிகளையும் கற்று பன்மொழிப் புலவர்களாக மாணவர்கள் எதிர்காலத்தில் பிரகாசிக்க வேண்டும். மொழி துவேசம் என்பது கூடவே கூடாது. Vivekananda says, Teach yourself, teach everyone, it is true nature, call upon the sleeping soul and see how it will have, power will come, purity will come, glory will come, goodness will come and that all excellent will come, when the sleeping soul is raise to self conscious activity. No chance, go around the world, any number of times, you never come back the better quotation. ஆன்மாவை கல்வியின் பெயரால் தட்டி எழுப்பினால் மட்டுமே நம்நாடு பயன்பெறும். அதற்கு ஆன்மிகக் கல்விதான் துணை புரிய முடியும. Empower the youth to enrich the nation. ஒவ்வொரு இளைஞனும் தன்னை கல்வியின் வாயிலாக உயர்த்திக்கொள்ள வேண்டும். அதன்மூலம் தன்னை உயர்த்திய நாட்டை தான் உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கு வதற்கு ஆன்மீகம் சார்ந்த பொறுப்பான கல்வியால்தான் இயலும். விவேகானந்தர் முக்கியமான ஐந்து கருத்துக்களை கூறியிருக்கிறார். 1.மனிதா நீ மகத்தானவன். 2.நீ எதுவாக விரும்புகிறாயோ அதுவாகவே ஆவாய். 3.அனைத்து திறனும் உன்னுள் ஏற்கனவே உள்ளது. 4.உன் மீது நீ நம்பிக்கை வை. 5.முயன்றால் முடியாதது எதுவுமில்லை. இந்த ஐந்து கோட்பாடுகள்தான் விவேகானந்தரின் இன்றியமையாத கோட்பாடுகள்.

வாட்டிகன்: 2004-ல் கிருஷ்ணராஜ் வாணாதிராயரை உலக அமைதியைப் பற்றிப் பேச போப்பாண்டவர் அவர்கள் வாடிகனுக்கு அழைத்துள்ளார்கள். 60 நாடுகளிலிருந்து வந்தவர்களில் 20 பேரைதான் போப்பாண்டவர் முன்னிலையில் பேசச் சொல்லி உள்ளார்கள். அந்த 20 பேரில் வாணாதிராயர் அவர்களும் ஒருவர். இந்த 20 உரைகளில் இருந்து மூன்றைத் தேர்வு செய்து அவர்களது official journal-ல் publish செய்துள்ளார்கள். அந்த மூன்றில் ஒன்று இவர் பேசியது. Cardinal incharge of pope’s protocol வாணாதிராயரிடம் உங்களை நாங்கள் 
போப்பாண்டவர் அருகிலுள்ள முதல் டேபிளில் அமரவைக்கப்போகிறோம் என்றார். அதற்கு அவர் நான் அவ்வளவு பெரிய ஆள் இல்லை என்றார். அதற்கு அவர்கள் நீங்கள் அவ்வளவு பெரிய ஆள் இல்லை. ஆனால், நீங்கள் இந்தியாவிலிருந்து வந்துள்ளீர்கள். ஆகவேதான் உங்களை அங்கு அமர செய்கிறோம் என்று கூறியுள்ளார்கள். இது இந்தியாவிற்கு கிடைத்த பெருமை. பின்னர் போப் அவர்களிடம் Father, he is come from India. He Represents one fifth of the human population of the world, he represents one of the oldest culture and civilization country, he represent one of the largest working democracy in the world. If you have to see one person that all the three credential he has necessarily only a Indian. உலகின் மொத்த ஜனத்தொகையில் ஐந்தில் ஒரு பங்கு கொண்ட நாட்டின் ஏக பிரதிநிதியாக வந்துள்ளார். உலகின் மிக மூத்த பழமையான கலாச்சாரத்தை நாகரீகத்தை கொண்ட நாட்டின் பிரதிநிதியாக வந்துள்ளார். உலகின் மிகப்பெரிய ஜனத்தொகை கொண்ட ஜனநாயக நாட்டின் ஒரே பிரதிநிதியாக வந்துள்ளார். இத்தகைய மூன்று குணங்களும் உடைய ஒருவரைக் காணவேண்டு மென்றால் அவர் ஒரு இந்தியராகத்தான் இருப்பார் என்றும் கூறியுள்ளார். இது நம் இந்திய தேசத்திற்கு அழகான வாடிகன் நகரில் கிடைத்த பெரும் பேராகும்.

திராவிடம் என்றால் என்ன?: மது ஆலைகள் நடத்திக்கொண்டே மது ஒழிப்பு குறித்து பேசுவது, மணல் கொள்ளை அடித்துக்கொண்டே நதிகள் பாதுகாப்பு பற்றி பேசுவது, சாதி, மத ஒழிப்பு பேசிக்கொண்டே சாதி பார்த்தே தேர்தலில் வாய்ப்புத் தருவது, ஏரி குளத்தை எல்லாம் பட்டா போட்டு காலிசெய்துவிட்டு நீர் நிலைகளை பாதுகாப்போம் என்று நடிப்பது, மாறிமாறி ஆட்சியில் இருந்தாலும் ஆளுங்கட்சி என்ன செய்கின்றது என்ற கேள்வியை அவ்வப்போது எழுப்புவது, பெண்ணுரிமை பேசிக்கொண்டே மூன்று நான்கு திருமணங்கள் செய்து கொள்வது, விஞ்ஞான ஊழல் செய்துவிட்டு ஊழலை ஒழிப்பேன் என்று கூறுவது, தமிழன் தமிழன் என்று சொல்லிக் கொண்டே தமிழை அழிக்கும் எல்லா வேலைகளையும் செய்வது இப்படி கூச்சப்படாமல் நடிப்பதற்கு பேருதான் திராவிடமா? என்ற இன்றைய இளைஞர்கள் எழுப்பும் கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை. மண்கலங்கள் வீழ்ந்துவிட்டாள் வேண்டுமென்று தேடுவார். வெண்கலங்கள் வீழ்ந்துவிட்டால் வேண்டுமென்று ஓடுவார். நம் கணங்கள் வீழ்ந்துவிட்டால் நாறும் என்று போடுவார்.

காகபுசுண்டர் என்ற சித்தரின் பாடலுக்கு ஏற்ப ஆன்மிகக் கருத்துக்களால் மட்டுமே அகிலம் உயரும். நாத்திக கருத்துக்களால் நாடு பெரும் முன்னேற்றம் பெறாது. இந்தியா குறிப்பாக தமிழ் நாடு ஆழ்வார்களும் நாயன்மார்களும் வாழ்ந்த ஆன்மீக பூமியே தவிர வேறு யாருடைய மண்ணும் அல்ல. உலகிற்கே ஆன்மீக குரு இந்தியாதான்.

No comments: